ரஜினிகாந்துக்கு 51 ஆவது தாதாசாகெப் பால்கே விருது

mcms
mcms

இந்திய சினிமாவில் மிக உயர்ந்த விருதான 51 ஆவது தாதாசாகெப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் பெறுவார் என்று இந்திய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார் என்று ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மதிப்புமிக்க விருது இந்திய சினிமாவின் தந்தை துந்திராஜ் கோவிந்த் பால்கே என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டது.

இது 1969 இல் நிறுவப்பட்டது.

இந்திய சினிமாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு சிறந்த பங்களிப்பு செய்ததற்காக இந்த விருது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.