காதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை வைத்து கொலை செய்த நடிகை

202104241443087363 Tamil News Tamil cinema Actress shanaya murder brother SECVPF
202104241443087363 Tamil News Tamil cinema Actress shanaya murder brother SECVPF

காதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை ஏவி கொடூரமாக கொன்ற வழக்கில் நடிகையும், ‘மிஸ்’ கர்நாடக அழகியுமான ஷான்யா, தனது காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்வாப்பூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலையில்லாமல் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் உடல் கிடந்தது. இதுபற்றி கேஷ்வாப்பூர் காவற்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபரை யாரோ மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி காரில் கொண்டு வந்து சாலையோரம் வீசிவிட்டு சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காவற்துறையினர் விசாரணை நடத்தினர்.


இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது படுகொலை செய்யப்பட்டது ‘மிஸ் கர்நாடகா’ அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், நடிகையுமான ஷான்யா காடவேயின் அண்ணன் ராகேஷ் என்பது தெரியவந்தது. அதாவது மும்பையில் வசித்து வரும் நடிகை ஷான்யா தனது மேலாளர் நியாஜ் அகமது என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இது ஷான்யாவின் அண்ணன் ராகேசுக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து அவர் ஷான்யாவிடம் கேட்டு கண்டித்துள்ளார்.

ஷான்யா

இதனால் ராகேசை கொலை செய்ய ஷான்யா முடிவு செய்தார். இதுகுறித்து அவர் தனது காதலன் நியாஜ் அகமதுவிடம் தெரிவித்தார். அவரும், இந்த கொலை திட்டத்திற்கு ஒப்புக் கொண்டார். அதையடுத்து அவர்கள் கூலிப்படையை ஏவி ராகேசை கொலை செய்ய முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் கூலிப்படையை சேர்ந்த தவுசிப் அகமது, அல்தாப் தாஜுத்தின் முல்லா, முகமது உருவா கிரினிவாலே, மாலிக், சைதிப்புத்தீன், பீரோஜ் ஆகியோரை அணுகி ராகேசை கொலை செய்ய பணம் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் கடந்த 9-ந் தேதி ராகேசை கூலிப்படையைச் சேர்ந்த தவுசிப் அகமது உள்ளிட்டோர் காரில் கடத்தி படுகொலை செய்தனர். பின்னர் அவரது கை, கால்களையும், தலையையும் துண்டு, துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிவிட்டு காரிலேயே தப்பிச் சென்றுவிட்டது காவற்துறையினருக்கு தெரியவந்தது.

இதையடுத்து காவற்துறையினர் காரின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரை பிடித்தனர். அவர் மூலம் கூலிப்படையைச் சேர்ந்த தவுசிப் அகமது, அல்தாப் தாஜுத்தின் முல்லா, முகமது உருவா கிரினிவாலே, மாலிக், சைதிப்புத்தீன், பீரோஜ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்தி நடிகை ஷான்யாவையும், அவரது காதலன் நியாஜ் அகமதுவையும் காவற்துறையினர் கைது செய்தனர்.