இன்று குருணாகலையில் அதிக கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

images 8
images 8

இலங்கையில் இன்றைய தினம் (24) காலை வரை அதாவது கடந்த 24 மணித்தியாளங்களில் 969 கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் குருணாகலை மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அதன் எண்ணிக்கை 251 ஆகும்.

இதற்கு மேலதிகமாக கம்பஹா மாவட்டத்தில் 236 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 194 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய 250 பேர் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று கொவிட் – 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வரை மினுவாங்கொடை பிரேன்டிக்ஸ் கொத்தணி மற்றும் கொழும்பு மீன்சந்தை கொத்தணியுடன் தொடர்புகளை கொண்டிருந்த 94,526 பேரில் 92 635 பேர் தற்போது முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இன்று காலை வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றும் சிகிச்சை மத்திய நிலையங்களில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,021 ஆகும்.

கொழும்பு மீன்சந்தை கொத்தணியின் எண்ணிக்கை 91,467 ஆகும்.

இலங்கையில் இன்று (24) காலை 6 மணி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 99, 690. இவர்களுள் 94 035 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

இன்று (24) காலை 6 மணி வரை அதாவது கடந்த 24 மணித்தியாளங்களில் வைத்தியசாலை மற்றும் மத்திய நிலையங்களில் 151 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

இன்று காலை வரை முப்படையினரால் நடதப்படும் 111 தனிமைப்படுத்தப்படும் மத்திய நிலையங்களில் 10 , 643 தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு நேற்றைய (23) தினம் 12,439 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கொவிட் – 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.