தனது பெயரில் போலிக் கணக்குகள் – அதுல்யா ரவி

201812311857444488 Athulya Ravi says about future husband SECVPF
201812311857444488 Athulya Ravi says about future husband SECVPF

முன்பு ஒருமுறை நடிகர் விஷ்ணு விஷால் குறித்து ஒரு போலி விளம்பரம் பரவியது. அதில், விஷ்ணு விஷால் படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தேவை என்று கூறப்பட்டிருந்தது. இதற்காக மக்களிடம் இருந்து பணத்தைப் பறித்து மோசடி செய்ய வாய்ப்புள்ளதால் இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கை இருக்கும்படி நடிகர் விஷ்ணு விஷால் கூறினார்.

தற்போது இதேபோல் ஒரு விளம்பரம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

சமீபத்தில் நடிகர் சத்தியராஜின் மகனும் நடிகருமானா சிபிராஜ் தனது ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதேபோல் மர்ம நபர் ஒருவர் நடிகை அதுல்யா பெயரில் ஒரு போலி ஐடியை உருவாக்கி அதில் திரைத்துறைப் பிரபலங்களுக்கு அதுல்யா குறுஞ்செய்தி அனுப்புவதுபோல் அனுப்பியுள்ளார். இது அதுல்யாவின் கவனத்திற்கு வந்ததும் இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்

அதில், எனது பெயரில் யாரோ போலி முகவரி உருவாக்கி நன் சினிமா நண்பர்களுக்கு மேசேஜ் செய்து வருகின்றனர். இது குறித்து சான் புகார் தெரிவித்துள்ளேன். நான் முகநூலில் இல்லை என்பதை எல்லோருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளர்.