விவேக் வீட்டுக்கு சென்று விஜய் அஞ்சலி!

1619419181 7603
1619419181 7603

சமீபத்தில் நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர் என்பதும் அவரது இறுதிச் சடங்கில் ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விவேக் உடன் பல படங்களில் இணைந்து நடித்த விஜய், விவேக் மறைவிற்கு ஒரு டுவிட் கூட போடவில்லை என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது

இந்த நிலையில் நேற்று ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய விஜய் இன்று காலை விவேக்கின் வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும் விவேக்கின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.