இலங்கையில் மேலும் 892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

close up of blood samples 3
close up of blood samples 3

இலங்கையில் மேலும் 892 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இலங்கையில் 102,271 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 266 பேர் இன்று (26) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 94,577 ஆக அதிகரித்துள்ளது.