உதயநிதி ஸ்டாலின் படத்தில் இணைந்த ஷிவானி!

32816hrz shivani narayanan 5
32816hrz shivani narayanan 5

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘ஆர்ட்டிகிள் 15’. இப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது.

கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ், இப்படத்தை இயக்குகிறார். உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் நடிகர் ஆரியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகளான ஷிவானியும் ‘ஆர்ட்டிகிள் 15’ தமிழ் ரீமேக்கில் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே அன்பறிவு என்ற படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் இன்னும் வௌியபகவில்லை.

‘ஆர்ட்டிகிள் 15’ தமிழ் ரீமேக்கின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்து முடிந்துள்ளது. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.