கொரோனா உறுதி; ரசிகர்களை எச்சரித்த பிரபலம்

1598693371 634
1598693371 634

பட நடிகர் மாறன் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இன்று மற்றொரு நடிகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் , கவனக்குறைவாக இருந்ததால் தனக்கு கொரோனா வந்துள்ளதாக நடிகர் சென்ராயன் தெரிவித்துள்ளார்.

மூடர் கூட்டம் என்ற படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் சென்ராயன்.

இந்நிலையில் நடிகர் சென்ராயனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் இது குறித்து அவர் ஒரு காணொளி பதிவிட்டுள்ளார்.

அதில்,நான நடிக்கவில்லை; உண்மையாகவே ஆவி பிடிக்கிறேன். வாழ்க்கையிலும் சினிமாவிலும் ஜெயிக்க வேண்டுமென எப்போதும் பாசிடிவ்வாக இருக்கும் எனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துவிட்டது. முதலில் கவனக்குறைவாக இருந்த எனக்கு இத்தொற்று வந்துவிட்டதால் வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன்… எனவே நீங்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் எச்சரிக்கையாக இருங்கள்…கொரொனா டேஞ்சரஸ் என ரசிகர்களை எச்சரித்துள்ளார்.