சிவகார்த்திகேயன் பட நடிகர் காலமானார்

7
7

முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் சிலர் இறந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்த நிலையில் தற்போது,சிவகார்த்திகேயன் பட நடிகர் பவுன்ராஜ் காலமானார்.

நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து, சூர்யா பட இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். இதன்பின்பு நடிகரும், பன்முகக் கலைஞருமான பாண்டு சில தினங்களுக்கு முன்பு காலமானார்.

இந்நிலையில், , சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற படங்களில் நடித்தவரும் துணை இயக்குநருமான பவுன்ராஜ் இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.