வாணி போஜனின் நடிப்பை பாராட்டிய இயக்குனர்

1623050050 907
1623050050 907

நடிகை வாணி போஜன் மிகவும் சிறந்த நடிகை என்று இயக்குனர் ராதாமோகன் கூறியுள்ளார்.

இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் வாணிபோஜன் மற்றும் வைபவ் நடிப்பில் மலேசியா டூ அம்னீசியா என்ற படம் ஜி 5 தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் அனைவரையும் கவர்ந்த கதாபாத்திரமாக நடிகை வாணிபோஜனின் கதாபாத்திரம் இருந்தது.

அவரின் நடிப்பு பற்றி பேசியுள்ள இயக்குனர் ராதாமோகன் ‘வாணி போஜன் மிகச்சிறந்த நடிகை. படத்தின் ஒரு காட்சியில் கணவரோடு மிகவும் பாசமாக பேசும் காட்சியில் அவர் சிறப்பாக நடித்திருந்தார். அவர் இன்னும் பல உயரங்களைத் தொடுவார்’ எனக் கூறியிருந்தார்.