பிரபல நடிகருடன் இணையும் யோகிபாபு !

1595564321 0817
1595564321 0817

தமிழ் சினிமாவில் இளம் நடிகர் மிர்சி சிவா. இவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் யோகி பாபு இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் ஜெயம் கொண்டான் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ஆர். கண்ணன்.

இப்படத்தை அடுத்து, சேட்டை, கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமரேங் போன்ற படங்களை இயக்கினார்.தற்போது, அதர்வா நடிப்பில் தள்ளிப்போகாதா, நகுலின் எரியும் கண்ணாடி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’’ உள்ளிட்ட படங்களை இயக்கிவருகிறார்.

இந்நிலையில் ஆர், கண்ணன் இயக்கத்தில் அடுத்து கலகலப்பு 2 படம் உருவாகவுள்ளதாகவும் இதில், மிர்சி சிவாவும், யோகிபாபுவும் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.