வெற்றிமாறனுக்கே டைரக்‌ஷன் சொல்லிக்கொடுக்கிறாரா விஜய் சேதுபதி… விடுதலை ஸ்பாட்டில் மோதல்!

1626065204 5581
1626065204 5581

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு இப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து வருகிறது.

தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படம் விஜய் சேதுபதியின் வருகைக்கு பின்னர் அதற்கான மார்க்கெட் இப்போது அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இதனால் 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகலாம் என சொல்லப்படுகிறது.

இப்போது அந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு இப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் அடர் வனப் பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி தேவையில்லாமல் வெற்றிமாறனின் பணிகளில் குறுக்கிட்டதாகவும், அதனால் இருவருக்கும் இடையே மோதல் எழுந்ததாகவும் சொல்லப்படுகிறது. மற்ற இயக்குனர்களிடம் நடந்து கொள்வது போல விஜய் சேதுபதி வெற்றிமாறனிடம் தனது வேலையைக் காட்டுவதாக திரையுலகினர் கிசுகிசுத்து வருகின்றனர்.