புஷ்பா திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

202009291455346453 Tamil News pushpa movie preview in tamil SECVPF
202009291455346453 Tamil News pushpa movie preview in tamil SECVPF

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்படவுள்ள நிலையில், முதல் பாகத்தின் வெளியீட்டு திகதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி இந்த திரைப்படம் எதிர்வரும் கிருஸ்துமஸ் பண்டிகையன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.

செம்மரக்கடத்தலை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.