தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 113 பேர் கைது

1584928526 curfew violators
1584928526 curfew violators

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,143 ஆக அதிகரித்துள்ளது.