நடிகை அமலாபால் வீட்டில் விசேஷம்:திருமண ஏற்பாடுகள் தீவிரம்

202108251028517898 Tamil News Tamil cinema amalapaul busy on her brother wedding SECVPF
202108251028517898 Tamil News Tamil cinema amalapaul busy on her brother wedding SECVPF

இயக்குனர் ஏ.எல்.விஜய்யை கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். இதையடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். 

அமலாபாலும், பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார் அமலாபால். 

குடும்பத்தினருடன் அமலாபால்


இந்நிலையில், நடிகை அமலா பாலின் தம்பி அபிஜித்திற்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம். இதனால் நடிகை அமலா பால், தனது தம்பியின் திருமண வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம். அண்மையில் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை நடிகை அமலா பால் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.