விருமன் படத்தில் அதிதி ஷங்கர் இந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்கின்றாரா!

bfa7819c7228897a04bff12ff87614df original
bfa7819c7228897a04bff12ff87614df original

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் தான் அதிதி ஷங்கர், இவர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.

மேலும் முத்தையா இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மதுரையில் தொடங்கியுள்ளது, இதில் கார்த்தி அதிதி ஷங்கர் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தற்போது 2டி நிறுவனத்தின் ராஜசேகர் அளித்த பேட்டியில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் குறித்து பல விஷயங்களை தெரிவித்து உள்ளார்.

அவர் கூறியதாவது “அதிதி ஷங்கர் எம்பிபிஎஸ் படித்த டாக்டர், நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுபவர், அதனால் அவருக்கு மதுரை தமிழ் வருமோ என்ற சந்தேகம் படக்குழுவினருக்கு இருந்தது, ஆனால் அவர் முதல் நாள் டெஸ்ட் படப்பிடிப்பு எடுக்கும்போது அசத்தலாக மதுரைத்தமிழ் பேசினார்.

அதுமட்டுமின்றி முதல் நாள் முதல் முதலாக கேமராவை பார்க்கிறோம் என்ற பயம் சிறிதும் இல்லை என்றும் டெஸ்ட் படப்படிப்பு முடிந்ததுமே எங்களுக்கு தேன் கிடைத்துவிட்டது என்று இயக்குனர் முத்தையா தெரிவித்தார் என்றும் கூறியுள்ளார். இந்த படத்தில் அதிதி ஷங்கருக்கு தேன்மொழி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.