வவுனியாவில் மதுபானசாலைக்கு முன் திரண்ட குடிமக்கள்!

FB IMG 1631888433699
FB IMG 1631888433699

வவுனியாவில் மதுபானசாலைக்கு முன் திரண்ட குடிமக்களினால் புதிய கொத்தணி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுபானசாலை திறப்பது தொடர்பாக இன்றையதினம் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. இதனையடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலும் கூட மதுபானசாலைகளிற்கு முன் அதிகளவான குடிமக்கள் கூடியிருந்தனர். 

இதன் காரணமாக வவுனியா நகரம், தாண்டிக்குளம் புதுக்குளம் வீதி, மன்னார் வீதி முடங்கும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக மன்னார் வீதியில் அமைந்துள்ள ஒரு மதுபானசாலைக்கு முன்பு 500க்கும் அதிகமான குடிமக்கள் குழுமியிருந்தனர். இதனையடுத்து விரைந்து செயற்பட்ட சுகாதார பிரிவினர் மதுபானசாலைகளை மூடுவதற்கான நடவடிக்கையை விரைந்து எடுத்திருந்தனர். இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் எவ்வாறு மதுபானசாலைக்கு முன்பாக இவ்வளவு குடிமக்கள் கூடினார்கள் என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.