இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்

samayam tamil
samayam tamil

தமிழ் சினிமாவின் தந்தை என்று கூறப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய சிவாஜி கணேசனின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கடந்த 1952 ஆம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடைசியாக கடந்த 1993 ஆம் ஆண்டு பூப்பறிக்க வருகிறோம் என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பதும் அதுவே அவரது கடைசிப்படமாக அமைந்து விட்டது

சிவாஜி கணேசன் கடந்த 2001ஆம் ஆண்டு யூலை 21ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார். சிவாஜி கணேசனின் உடல் மறைந்தாலும் அவரது நடிப்பு தமிழ் சினிமா உள்ளவரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.