சிறந்த நடிகருக்கான விருது ஏன் எனக்கு கொடுக்கவில்லை – பார்த்திபன்

1635311004 8218
1635311004 8218

நடிகர் பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் பரவலாக கவனத்தை பெற்றது.

பார்த்திபன் இயக்கி, தயாரித்து அவர் மட்டுமே நடித்த ஒரு படம் தான் ‘ஒத்த செருப்பு. உலகிலேயே ஒரு படத்தை ஒருவரே இயக்கி, தயாரித்து நடித்த ஒரு திரைப்படம் என்ற பெருமையை இந்த ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் பெற்றுள்ளது.

இந்த படத்திற்கு நடுவர்கள் வழங்கும் சிறந்த படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள நடிகர் பார்த்திபன் ’இந்த படத்துக்கு இன்னும் நிறைய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். எனக்கு என்னுடைய படத்தை பற்றி நன்றாக தெரியும். இன்னும் சில விருதுகளை பெற தகுதியான திரைப்படம் இது. இந்த படத்தில் எனக்கு ஏன் விருது கிடைக்கவில்லை என்ற ஆதங்கமும் எனக்கு உண்டு.’ எனக் கூறியுள்ளார்.