பிணவறையில் அமர்ந்து சாப்பிடும் அமலா பால்!

1635315058 7297
1635315058 7297

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால்.

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

இப்போது தொடர்ச்சியாக துணிச்சலான மற்றும் சர்ச்சையானக் கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் மலையாளத்தில் அவர் புதிதாக நடிக்கும் கேடவர் என்ற படத்தின் வித்தியாசமான சுவரொட்டி நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவர் பிணக்கூறாய்வு செய்யும் மருத்துவராக நடிக்கிறார்.