புனித் ராஜ்குமாரின் சமாதிக்கு சென்ற சிவகார்த்திகேயன்

1635831157 2783
1635831157 2783

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவை அடுத்து அவரது சமாதியில் சென்று நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகரும், பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனுமான புனித் ராஜ்குமார் சில தினங்கள் முன்பாக மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவரது உடலுக்கு கர்நாடக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு பெங்களூரில் உள்ள அவரது பெற்றோர்கள் நினைவிடங்களுக்கு அருகே அவரது உடலும் புதைக்கப்பட்டது. இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் சமாதிக்கு நேரில் சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் அவரது சமாதியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்