இரண்டாவது திருமணம் முடிந்து 20 வருடத்திற்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்கவந்த நடிகை!

minnal deepa in yaarudi nee mohini episode 697 2019 jpg
minnal deepa in yaarudi nee mohini episode 697 2019 jpg

2000ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் மாயி. இதில் வடிவேலு இடம்பெறும் வாமா மின்னல் என்ற காமெடி காட்சியை யாராலும் மறக்க முடியாது, அதில் மின்னல் பெண்ணாக நடித்தவர் தான் தீபா.

அந்த படத்திற்கு பிறகு சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவந்த அவர் நாடகங்களில் நடித்து வந்தார்.

இடையில் அவருக்கு இரண்டாவது திருமணமும் நடந்தது, ராஜவம்சம் என்ற படம் மூலம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். 20 வருடத்திற்கு பிறகு படங்களில் நடிக்க தொடங்கியுள்ளதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

கதிர் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் சசிகுமார்-நிக்கி கல்ராணி முக்கிய நடிகர்களாக நடிக்க யோகி பாபு, சுமித்ரா, விஜயகுமார், ராதா ரவி, நிரோஷா, மனோபாலா மற்றும் சிங்கம் புலி ஆகியோர் நடித்துள்ளனர்.