தோல்வி பயத்தால்தான் தேர்தலை இழுத்தடிக்கின்றது கோட்டாபய அரசு!

135584 thumb 1
135584 thumb 1

“மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு ஏன் அஞ்சுகின்றது? தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயார். தோல்வி பயத்தால்தான் தேர்தலை அரசு இழுத்தடிக்கின்றது.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம். எமது பக்கத்தில் தவறு இடம்பெற்றதுதான். அது சரி செய்யப்பட வேண்டும். அதற்கான ஆதரவை நாம் வழங்குவோம். எனவே, எமது தவறை மட்டும் சுட்டிக்காட்டிக்கொண்டு தேர்தலை இழுத்தடிக்க வேண்டாம். இரு வருடங்கள் தவறை மட்டும்தான் கூறிக்கொண்டிருக்கின்றீர்கள்.

அதேபோல் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் இரு வருடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது” என்றார்.