ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட இடமளியோம்! – பீரிஸ்

ஜி.எல்.பீரிஸ் 1024x682
ஜி.எல்.பீரிஸ் 1024x682

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க முற்பட்டால், அந்த முயற்சியைத் தோற்கடிப்பதற்கு எதிரணிகள் கூட்டாகக் களமிறங்கும் என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“மக்கள் அனுமதி ஆணையின்றி முன்னெடுக்கப்படும் ஆட்சியானது ஏதேச்சதிகார ஆட்சியாகவே அமையும். ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமெனில் உரிய காலத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

நுவரெலியாவில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஆற்றிய உரையானது, தேர்தல் தொடர்பான அச்சத்தை உருவாக்கியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது. அவ்வாறான முயற்சியில் ஜனாதிபதி இறங்கினால் எதிரணிகளை இணைத்துக்கொண்டு அந்த முயற்சியைத் தோற்கடிப்போம்.” – என்றார்.