‘மொட்டு’வை விரட்ட மக்கள் தயார்! – அநுர

anura 1
anura 1

“நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மொட்டுக் கட்சியினரை விரட்டியடிக்க மக்கள் தயாராகவுள்ளனர். எனவே, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.”

– என்று ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி பதவி மீது ஆசை; மொட்டுக் கட்சியினருக்கு அமைச்சுப் பதவி மீது ஆசை. இப்படிப் பதவி ஆசை பிடித்தவர்களின் ஆட்சி தற்போது பிளவடைந்துள்ளது.

மக்கள் ஆணையை இழந்த ரணில் – மொட்டு அரசு, பதவி ஆசையில்தான் ஆட்சியில் அமர்ந்தது. இது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இவர்கள் எம்.பியாகப் பதவி வகிக்கக்கூடத் தகுதியற்றவர்கள். எனவே, புதிய மக்கள் ஆணை வேண்டும்; புதிய அரசு வேண்டும். எனவே, நாடாளுமன்றத் தேர்தல் விரைந்து நடத்தப்பட வேண்டும்.” – என்றார்.