கொள்ளை அடிக்கப்பட்ட 22 பவுண் நகைகள்!

23 648a8eeda0d23
23 648a8eeda0d23

ஊர்காவற்றுறை காவற்துறை பிரிவிற்குட்பட்ட நயினாதீவு பகுதியில் 36 இலட்சம் ரூபாய் பெறுமதியான 22 பவுண் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

நயினாதிவு 5 ஆம் வட்டார பகுதியில் 13 ஆம் திகதி இரவு 2 பெண்கள் வசித்துவரும் வீட்டில், அவர்கள் உறக்கத்தில் இருந்த போது வீட்டுக் கூரையை உடைத்து வீட்டில் இறங்கிய திருடர்கள் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த 22 பவுண் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

காலை வீட்டினுடைய அறையை திறந்து பார்க்கின்ற போது கைப்பை காணாமல் இருந்தமையால் அதிலிருந்து நகைகள் கைப்பையுடன் கொள்ளையடிக்கப்பட்டமை தெரிய வந்தநிலையில் ஊர்காவற்றுறை காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் தடயவியல் காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.