நடிப்பில் இருந்து விலகும் நடிகை நயன்தாரா

Nayantara
Nayantara

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் 9ஆம் திகதி இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நடிப்பில் இருந்து விலகும் நடிகை நயன்தாரா.. திருமணத்தால் சினிமாவிற்கு முற்றுப்புள்ளியா | Nayanthara Is Going To Stop Acting

இவர்கள் இருவரும் தற்போது இரண்டு ஹனிமூன் சென்றுள்ளனர். இந்நிலையில், நடிகை நயன்தாரா தற்போது ஒப்பந்தம் செய்திருக்கும் படங்களை நடித்து முடித்துவிட்டு, நடிப்பில் இருந்து விலகப்போவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.இதற்க்கு காரணம் நயன்தாராவின் குடும்பத்தினர் படப்பிடிப்பின் போது தாலியை கழட்ட வேண்டாம் என்று கூறியுள்ளார்களாம். இதனால், தற்போது நயன்தாரா நடித்து வரும் படங்களில் கூட அவர் தாலியை கழட்டாமல் தான் நடித்து வருகிறாராம்.

பல விதமான கதாபாத்திரங்களில் நடிக்கும்போது கண்டிப்பாக தாலியை கழற்றி வைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதினால், நடிகை நயன்தாரா நடிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளாராம்.

இதன்பின் தன்னுடைய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தை நயன்தாரா கவித்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.