இணையத்தை கலக்கும் தனுஷின் ‘நானே வருவேன்’ டீசர்

1762490 tea
1762490 tea

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நானே வருவேன் வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். ‘நானே வருவேன்’ திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.  

நானே வருவேன் இந்நிலையில் ‘நானே வருவேன்’ படத்தின் டீசரை தனுஷ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.