குறை பிரசவத்தில் பிறந்த நயன்தாராவின் குழந்தைகள்!

1774459 nayan
1774459 nayan

திருமணமாகி 4 மாதங்களில் வாடகை தாய் மூலம் நயன்தாரா இரட்டை குழந்தைகளை பெற்றது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நயன்தாராவின் குழந்தைகள், குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது.

ஆனால் இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்னரே திட்டமிட்டு கருமுட்டை, உயிரணு ஆகியவற்றை சென்னையில் இருக்கும் பிரபலமான மருத்துவர்கள் மூலம் வாடகை தாய்க்கு செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து 4 மாதங்களான நிலையில் இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தாலும், குழந்தைகள் இரண்டும் குறை மாதத்தில் பிறந்ததால் வைத்தியசாலையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் நயன் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.