‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் மகேந்திரன்

i3 1 7
i3 1 7

சரத்குமார், குஷ்பு நடித்த ‘நாட்டாமை’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். அந்தக் காலத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

விஜய் நடித்து வெளிவந்த ‘மின்சாரக் கண்ணா’ படத்தில் அவர் தம்பியாகவும் நடித்துள்ளார் மகேந்திரன். இளைஞன் ஆனதும் சில படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இருந்தாலும் அவரால் பெயர் வாங்கும் அளவிற்கு அந்தப் படங்கள் அமையவில்லை.

தற்போது ‘மாஸ்டர்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் மகேந்திரன். இந்தப் படம் தனக்கு ஒரு திருப்புமுனையைத் தரும் என்று நம்புகிறார். படத்திலும் அவருடைய கதாபாத்திரம் படத்திற்கே ஒரு திருப்புமுனையைத் தருமாம்.

எனவே, தன்னை இப்போது மீண்டும் ‘மாஸ்டர்’ மகேந்திரன் என அழைக்க விரும்புகிறாராம். இதனால், டுவிட்டரில் கூட தன் பெயருக்கு முன்னால் ‘மாஸ்டர்’ என்ற வார்த்தையைச் சேர்த்துள்ளார்.