சீனர்களை திட்டி தீர்த்த -பிரபல நடிகை

dc70c8ad47ed6b7c8f0fc46df83ce26f
dc70c8ad47ed6b7c8f0fc46df83ce26f

கொரோனாவில் இருந்து மீண்ட சீனர்கள் மீண்டும் வவ்வால், தேள் போன்ற மாமிச உணவுகள் உண்பதை பிரபல நடிகை கடுமையாக கண்டித்துள்ளார் .

சீனாவின் வுஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகம் ழுழுவதும் பரவி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. சீனாவில் மட்டும் இந்த வைரசால் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். வுஹானில் உள்ள சந்தையில் உணவுக்காக பாம்பு, நாய், எலி, தேள், கரப்பான் பூச்சி, வௌவால், முதலைகள், எறும்புத் தின்னி, ஒட்டகம் உள்ளிட்ட 122 விலங்குகளின் இறைச்சிகள் உணவுக்காக விற்கப்படுகின்றன.

இந்த இறைச்சி சந்தையில் ஏதோ ஒரு விலங்கில் இருந்துதான் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு தொற்றியதாக கூறப்படுகிறது. கிருமியால் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த சந்தையில் வேலை பார்த்தவர்கள்தான். தற்போது சீனாவில் வைரஸ் தொற்று குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், அங்குள்ள சந்தைகளில் மீண்டும் இதே விலங்குகளை விற்கவும், வாங்கவும் தொடங்கி உள்ளனர்.
இதை கேள்விப்பட்ட இந்தி நடிகை ஸ்ரத்தா தாஸ் சீனர்களை கடுமையாக சாடி உள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், “‘கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகும் இப்படி வௌவால் எலி, நாய்கள், கரப்பான் பூச்சி, முயல், தேள் இதையெல்லாம் தின்கிறீர்களே? உங்களுக்கு புத்தி இல்லையா?” என்று கண்டித்துள்ளார். இறைச்சி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அவரது பதிவுக்கு ஆதரவாக மேலும் ஏராளமானோர் சீனர்களை திட்டி கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.