‘வேதாளம்’ ரீமேக்கில் சிரஞ்சிவி!!

i3 3
i3 3

சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘வேதாளம்’.

இப்படத்தை அப்போதே தெலுங்கில் ரீமேக் செய்வதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இப்போது இப்படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘சைரா’ படத்திற்குப் பிறகு சிரஞ்சீவி ‘ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின் மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘லூசிபர்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கப் போகிறார். அதற்குப் பிறகுதான் ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்கில் நடிப்பார் என்கிறார்கள்.

அஜித் நடித்து வெளிவந்த ‘பில்லா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கியவர்தான் மெஹர் ரமேஷ். கடந்த ஏழு வருடங்களாக எந்தப் படத்தையும் இயக்காமல் இருக்கிறார். ‘பில்லா’ ரீமேக்கை அவர் வெற்றிகரமாக இயக்கியதாலேயே அவரை அழைத்து சிரஞ்சீவி பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இருந்தாலும் ஐந்தாறு வருடங்கள் கழித்து ஒரு படத்தை ரீமேக் செய்கிறார்கள் என்றால் ஆச்சரியம்தான்.