உடன் நடித்த நடிகருடன் மேக்னா மறுமணம்

i3 1 1
i3 1 1

மலையாள சின்னத்திரையில் இருந்து தமிழ் சின்னத்திரைக்கு வந்தவர் மேக்னா வின்சென்ட்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு தொடரின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பொன்மகள் வந்தாள் தொடரில் நடித்தார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு டான் டோமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டோமி டான் மலையாள சீரியல் நடிகையான டிம்பிள் ரோஸின் சகோதரர் .

டான் டோமிக்கும், மேக்னா வின்சென்ட்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து இருவரும் பரஸ்வரம் விவாகரத்து கோரி கோர்டில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது நீதிமன்றம் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உள்ளது.

இந்த நிலையில் மேக்னா வின்சென்ட், தமிழ் தொடரில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து வருதாகவும் அவரை மறுமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுமணம் குறித்து வெளியான தகவல்களை மேக்னா இதுவரை மறுக்கவில்லை.