இந்தியா – ஜப்பான் கலாச்சாரத்தை சொல்லும் சுமோ

i3 4 1
i3 4 1

சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘சுமோ’. ஹோசிமின் இயக்கி உள்ளார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஜப்பானின் அடையாளமான இந்த விளையாட்டை படத்திற்கு தலைப்பாக்கி உள்ளனர். ஜப்பானிலிருந்து 50 நிஜ சுமோ வீரர்களை வரவழைத்து நடிக்க வைத்துள்ளனர். இந்த கதையை கேட்டு இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் தானே இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய முன் வந்துள்ளார்.

நிறைய விளையாட்டுகள் இருந்தாலும் சுமோ பற்றிய கதையை கலகலப்பாகவும், சுவாரஸ்யமாகவும் படமாக்கி உள்ளனர். படம் வெளியாகும் போது இந்தியா – ஜப்பான் கலாச்சாரத்துடன் இந்தியாவின் மனிதாபிமானமும் பேசப்படும் என்கிறார் இயக்குனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ள இப்படம் இந்த கோடை விடுமுறையில் வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா ஊரடங்கு வந்துவிட்டதால் தள்ளிப்போனது. ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறக்கப்படும் போது படம் வெளியாகிறது.