80களின் நாயகியர் அசத்தும் ‘ஓ அந்த நாட்கள்

i3 11
i3 11

மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ‘ஓ அந்த நாட்கள்’ எனும் ‘ரொமாண்டிக் காமெடி’ திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் 1980களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி நடித்திருக்கின்றனர்.

1980’களில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நான்கு வெவ்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்த ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோருடைய கதாபாத்திரங்களின் நீட்சியை பின்புலமாகக் கொண்டும், அவர்களின் தற்போதைய வாழ்வின் நிதர்சனத்தையும் அடித்தளமாக கொண்டும், குடும்ப பாங்கான கதையை எடுத்துள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.

இப்படத்தில், ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடிக்க, அவர்களுடன் இணைந்து ஜித்தின் ராஜ், லதா ஹெக்டே ஜோடியும், ஒய்.ஜி.மகேந்திரன், சுலக்ஷனா, மனோபாலா, பானுசந்தர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இயக்குனர் சுந்தர்.சி சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் படமாகி உள்ளது.

ஷரன் சாமுவேல் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. முதற்கட்டமாக மெட்ராஸ் என்ன என்ற முதல்பாடலை யு-டியூப்பில் வெளியிட்டுள்ளனர்.