‘கபடதாரி’ – பின்னணி வேலை தொடங்கியது

i3 1 3
i3 1 3

சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கபடதாரி’. கன்னட நடிகை சுமன் ரங்கநாதன் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்க தனஞ்செயன் தயாரிக்கிறார்.

வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சினையால் பின்னணி வேலைகள் தொடங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தமிழக அரசு சினிமா போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளுக்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து நேற்று (மே 11) ‘கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது.