பொலிசிடம் ஆட்டோகிராப் வாங்கிய சூரி

i3 2 3
i3 2 3

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. கொரோனா ஊரடங்கில் ஆரம்பத்தில் தனது பிள்ளைகளுடன் சேர்ந்து வீட்டில் இருந்தபடியே வீடியோ எடுத்து மக்களை மகிழ்த்து கொண்டிருந்தார். தொடர்ந்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வந்தார்.

இவரது வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தன. இந்நிலையில் சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 பொலிஸ் ஸ்டைஷனுக்கு வருகை தந்தார் சூரி. அங்கிருந்த போலீசாரிடம் ஆட்டோகிராப் வாங்கினார்.

சூரி கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், அதிலிருந்து நமது உயிரைப் பாதுகாக்கும் விதிமுறைகளைத் தினந்தோறும் கூறி தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் போலீஸார். தங்களது உயிரையும் பெரிதென்று எண்ணாமல், இரவு பகல் பாராமல், 24 மணி நேரமும் நமது உயிர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழி நடத்திய அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள். எங்கள் ஊரில் அய்யனார் சாமி தான் எல்லை சாமி, அது போல் தற்போது போலீசார் நாம் எல்லோருக்கும் எல்லை சாமி.

கடவுளை அன்றாடம் வணங்கும் நாம் அனைவரும், சமீப காலங்களாக போலீசாரையும் வணங்க ஆரம்பித்து விட்டோம். ஆனால் இந்த கொரோனாவை அவர்களை விட்டு வைக்கவில்லை. இது வரை 60 போலீசார் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறியுள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்.