வெளிநாட்டு பேட்மிண்டன் வீரருடன் டாப்ஸி காதல் ?

i3 3 3
i3 3 3

தமிழில் ‘ஆடுகளம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. தெலுங்கு, தமிழ் மொழிகளில் சில வெற்றிப் படங்களில் நடித்தவர் தற்போது ஹிந்திப் படங்களில் தான் அதிகமாக நடிக்கிறார்.

டாப்ஸிக்கும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவருக்கும் காதல் எனத் தெரிய வந்துள்ளது. டாப்ஸியின் சகோதரிதான் மத்தியாஸை டாப்ஸிக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அதன்பின் அவர்களது குடும்பத்தில் ஒருவராகிவிட்டாராம் மத்தியாஸ்.

அவர் இந்தியாவிற்கு வரும் போதெல்லாம் டாப்ஸியுடன் தான் சுற்றுவாராம். சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய காதலரைப் பற்றி பெயரைக் குறிப்பிடாமல் சொல்லியிருக்கிறார் டாப்ஸி. தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இப்போதைக்குத் திருமணம் இருக்காது என்கிறார்கள்.