நயன்தாரா படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி

i3 12 1
i3 12 1

ஆர்ஜே.பாலாஜி மற்றும் என்.ஜெ.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கி வரும் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா, அம்மன் வேடத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில், நயன்தாராவுடன், ஆர்ஜே பாலாஜி, மௌலி, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், இந்துஜா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. செல்லாத்தா, மாரியாம்மா எங்கள் மாரியம்மா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் அம்மன் பாடல்களை பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி. இவர் முக்குத்தி அம்மன் படத்தில் இடம்பெற்றுள்ள மூக்குத்தி அம்மனுக்கு பொங்கல் வைப்போம் எனும் பாடலையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.