ஓடிடி தளத்தில் இன்றிரவு ‘குலாபோ சித்தாபோ’ வெளியாகிறது

i3 15 1
i3 15 1

சூஜித் சர்க்கார் இயக்கத்தில் அமிதாப்பச்சன், ஆயுஷ்மான் குரானா, விஜய் ராஸ், பிரிஜேந்திர காலா மற்றும் பலர் நடித்துள்ள ஹிந்தித் திரைப்படம் ‘குலாபோ சித்தாபோ’. ணறகொரானோ ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் சில படங்களை வாங்கி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடுவதை ஆரம்பித்தது அமேசான்.

ஐந்து மொழிகளில் 7 படங்களை அடுத்தடுத்து வெளியிடும் அமேசானின் இரண்டாவது படமாக ‘குலாபோ சித்தாபோ’ இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக உள்ளது. முதல் படமாக மே 29ம் தேதி தமிழ்ப் படமான ‘பொன்மகள் வந்தாள்’ படம் வெளியானது. அடுத்த வாரம் அடுத்த தமிழ்ப் படமாக ஜுன் 19ம் தேதி ‘பெண்குயின்’ படம் வெளியாக உள்ளது.

‘பொன்மகள் வந்தாள்’ படம் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பாகவே பைரசி தளமான தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் வெளியானது. அது போன்று இன்றும் நடக்காமல் அமேசான் தடுத்தாக வேண்டும்.

அடுத்து ‘பொன்மகள் வந்தாள்’ படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்தது என்பதை அந்நிறுவனம் அறிவிக்கவில்லை. அதே சமயம் ‘குலாபோ சித்தாபோ’ படம் பற்றிய வரவேற்பை அந்நிறுவனம் அறிவிக்க வாய்ப்புள்ளது. அப்போதுதான் அடுத்தடுத்து படங்களைக் கைப்பற்ற முடியும்.

‘குலாபோ சித்தாபோ’ டிரைலர் கடந்த மாதம் 22ம் தேதி வெளியானது. அந்த டிரைலருக்கு இதுவரை 4 கோடியே 49 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. அவ்வளவு பேரும் இந்தப் படத்தைப் பார்த்தாலே பெரிய வெற்றிதான்.