சாமி இடத்தில் நயன்தாரா போட்டோ

i3 3 3
i3 3 3

நடிகை நயன்தாராவுக்கு வயது வித்தியாசம் இல்லாமல் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆண்கள் மட்டுமல்ல பெண்கள் பலரும் நயன்தாராவின் தீவிர ரசிகைகளாக இருக்கின்றனர். இதன் காரணமாகவே அவர் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகின் முதல் ஹீரோயினாக இருக்கிறார்.

இந்நிலையில் நயன்தாராவின் புகைப்படத்தை வீட்டின் சாமியிடத்தில் வைத்து கும்பிடுவது போல மீம்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

அந்த மீம்ஸ்ல், மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று உள்ளது.

அந்த புகைப்படத்தை மற்ற சாமி படங்களுக்கு மத்தியில் வைத்திருக்கிறார்கள். இப்படி செய்த அந்த தீவிர நயன்தாரா ரசிகரை அவரது தந்தை உருட்டு கட்டையால் அடிப்பது போல் மற்றொரு புகைப்படம் உள்ளது. இந்த மீம்ஸ் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.