விஜய்க்காக ஒன்றிணைந்த 20 பிரபலங்கள்

i3 2 3
i3 2 3

நடிகர் விஜய்யின் 46வது பிறந்தநாள் வரும் 22ம் திகதி வருகிறது. கொரோனா பிரச்னையினால் மக்கள் துன்பத்தில் இருக்கும் இந்த சூழலில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு விஜய் தடை உத்தரவு போட்டிருக்கிறார்.

ஆனாலும் சமூகவலைதளங்களில் மட்டுமாவது விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடிவிட வேண்டும் என ரசிகர்கள் உறுதியாக இருக்கின்றனர். அவரது பிறந்தநாளுக்காக பொதுவான புகைப்படம் (common DP) ஒன்றை ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். அதனை தமிழ் திரையுலகைச் சேர்ந்த 20 பிரபலங்கள் வெளியிட்டு உள்ளனர்.

நடிகர்கள் சாந்தனு, வைபவ், விக்ராந்த், கதிர், நடிகைகள் வரலட்சுமி, ஆண்ட்ரியா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், இந்துஜா, அமிர்தா, இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், மோகன் ராஜா, ரத்னகுமார், அஜய் ஞானமுத்து, அருண்ராஜா காமராஜ், பாடலசிரியர் விவேக், தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், ஹேமா ருக்மணி உள்ளிட்டோர் இந்த டிபியை வெளியிட்டனர்.