சென்னைக்கு செல்லும் விவேக்

i3 16 4
i3 16 4

தமிழகத்தில் சென்னையில் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதுப்பற்றி நடிகர் விவேக் டுவிட்டரில், ‛எல்லோரும் அச்சமுடன் சென்னையை பார்க்கின்றனர்.

கொரோனா பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் தொகை குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர்.

தலைநகரில், பலமொழி மற்றும் இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை. அது மீளும் வாழும் ‘ எனக் கூறியுள்ளார்.

மற்றொரு டுவீட்டில், ‛கொரோனா தாக்கம் குறைந்ததும், நாம் செய்ய வேண்டியது. நம் பாரம்பரியத்தை காப்பது. இயற்கையை போற்றுவது. நீர் மேலாண்மை, இயற்கை விவசாயம் மீட்பது. சித்த வைத்தியத்தை நாம் வாழ்வில் மீண்டும் சேர்ப்பது. இதற்கு நம் கிராம, நகர இளையோர், அரசியல், மத இன பாகுபாடு இன்றி இணைய வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.