சினிமாத்துறை பாதிப்பு ;மத்திய அரசுக்கு பெப்சி கோரிக்கை

i3 19 4
i3 19 4

கொரோனா ஊரடங்கால் சினிமா துறை மிகவும் பாதிப்படைந்துள்ள நிலையில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது பெப்சி அமைப்பு.

இதுதொடர்பாக பெப்சி வெளியிட்ட அறிக்கை : கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஜூன் 19 – 30 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகள் மற்றும் பிந்தைய பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் அரசின் முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

இந்நேரத்தில் குறிப்பிட்ட பகுதிவாழ் மக்களுக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் 1,000 ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ள தமிழக அரசு, திரைப்படத் தொழிலாளர்களையும் அவர்களோடு இணைத்து நிவாரண உதவி அறிவித்துள்ளனர். இதற்கு நன்றி. மத்திய அரசு அறிவித்த 20 லட்ச கோடி ரூபாயில் எந்த நிதியும் இந்திய திரைப்படத்துறைக்கோ தொழிலாளர்களுக்கோ அறிவிக்கவில்லை. மாநில அரசு மூன்று முறை நிவாரண உதவி அளித்துள்ள நிலையில் மத்திய அரசு கண்டும் காணாமலும் உள்ளது.

இவ்வாறு பெப்சி தலைவர் செல்வமணி மற்றும் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.