தற்கொலை செய்த நடிகர் சுஷாந்த் சிங்கின் நிலைதான் எனக்கும்! நடிகை வித்யா

VITHYA
VITHYA

பாலிவுட் நடிகரான சுஷாந்த் தற்கொலைக்கு முக்கிய காரணமாக அவர் தொடர்ந்து 6 படங்களில் இருந்து நீக்கப்பட்டதும் ஒன்றாக கூறப்படுகிறது.

அந்த வகையில் பிரபல சீரியல் நடிகையான வித்யா பிரதீப் அதேபோல் தொடர்ந்து 6 படங்களில் இருந்து நீக்கப்பட்டதாக பதிவிட்டுள்ளார்.

இவர் பசங்க 2 மற்றும் தடம் திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரையில் நாயகி தொடரின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தான் கிட்டத்தட்ட 6 படங்களுக்கு மேல் வெளியேற வேண்டியதாகி விட்டது என கூறியுள்ளார். மேலும் ஒன்றன் பின் ஒன்றாக unprofessional காரணங்களுக்காக தான் அதிலிருந்து வெளியேறி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தடம் படத்தில் மகிழ் திருமேனி உடன் பணியாற்றிய பிறகுதான் தனக்கு சினிமா மீதான நம்பிக்கை திரும்ப வந்தது எனக் கூறியுள்ளார் வித்யா பிரதீப்.