அருள்நிதியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு!

download 1 6
download 1 6

வம்சம், மௌனகுரு ,தகராறு, டிமான்டி காலனி ,ஆறாது சினம் உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்த அருள்நிதி நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் இன்று(21) வெளியாகவிருப்பதாகவும், இந்த டைட்டிலை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் சற்றுமுன்னர் அருள்நிதியின் 14வது படத்தின் டைட்டில் ‘டைரி’ என்று அறிவித்துள்ளார். மேலும் அவர் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இன்னாசி பாண்டியன் இயக்கத்தில், பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ரான் எதான் யோஹனன் இசையில் சேகர் பாபு ஒளிப்பதிவில், ராஜாசேதுபதி படத்தொகுபில் இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அருள்நிதி ஏற்கனவே சீனு ராமசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படமும், ’களத்தில் சந்திப்போம்’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.