நடிகர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய்!

202008121502146028 Tamil News Sanjay dutt affected by cancer SECVPF
202008121502146028 Tamil News Sanjay dutt affected by cancer SECVPF

பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் உடல்நல குறைவால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறுகையில், நடிகர் சஞ்சய் தத் அவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என கூறப்பட்டது.

அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது, அவரின் பரிசோதனையின் முடிவுகள் எதிர்மறையாக வந்துள்ளது.

இதனையடுத்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு ஒரு இரண்டு நாட்களில் வீடு திரும்பினார்.

இது குறித்து அவரின் டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

தற்போது அவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே கூறியுள்ளார். அதுவும் 3வது கட்டம், இதற்காக அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு செல்கிறாராம்.