பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளவர்கள் மற்றும் தெரிவாகாதவர்கள் தமது சொத்துக்கள் பற்றிய விபரங்களை கையளிக்க வேண்டும்

321c5665 82288a2c d2daf784 2c535a3e election commission of srilanka 850 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
321c5665 82288a2c d2daf784 2c535a3e election commission of srilanka 850 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் மற்றும் தெரிவாகாதவர்கள் தமது சொத்துக்கள் பற்றிய விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவில் கையளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

விபரங்களை உரிய காலத்தில் கையளிக்க தவறுபவர்கள் சட்டத்தை மீறுபவர்களாக கருதப்படுவர் என்பதோடு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விடயங்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அவர்களைப் பற்றி அறிக்கையிடும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்னர் அல்லது முதலாவது பாராளுமன்ற அமர்வு இடம்பெறுவதற்கு முன்னர், குறித்த வேட்பாளர்கள் தெரிவத்தாட்சி அலுவலர் ஊடாகவோ அல்லது நேரடியாகவோ தேர்தல் ஆணைக்குழுவில் கையளிக்க வேண்டும்.

தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளவர்கள் இது வரையில் தமது சொத்துக்களும் பொறுப்புக்களும் பற்றிய வெளிப்படுத்தல்களை கையளிக்க முடியாதவர்கள் உடனடியாக அந்தந்த தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஊடாகவோ அல்லது நேரில் வந்து தேர்தல் ஆணைக்குழுவில் கையளிக்க வேண்டும்

பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாத வேட்பாளர்கள் இம்மாதம் 7 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 6 ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்து விபரங்களை தேர்தல் ஆணைக்குழுவில் வெளிப்படுத்த வேண்டும். என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.