பிளாக் பேந்தர் புகழ் ஹாலிவுட் நடிகர் மரணம்

9 1

பிளாக் பாந்தர் படத்தில் மூலம் உலக  பிரபலமான அமெரிக்க நடிகர் சாட்விக் போஸ்மேன் புற்றுநோய் காரணமாக தமது 43 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

மார்வெல்லின் கேப்டன் அமெரிக்கா சிவில் வார் என்ற திரைப்படத்தில் பிளாக் பேந்தராக நடித்தவர் நடிகர் சாட்ஸ்விக் போஸ்மேன். அந்த கதாபாத்திரம் மிகப்பெரிய வெற்றி அடையவே பிளாக் பேந்தர் கதாபாத்திரத்துக்காகவே தனியாக ஒரு முழுநீள படம் உருவானது. அதிலும் போஸ்மேனே நடித்தார். அந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதனால் போஸ்மேனுக்கு உலகளவில் புகழ் கிடைத்தது. இந்நிலையில் இன்று அவர் பெருங்குடல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு புற்றுநோய் இருந்ததை வெளி உலகுக்கு அறிவிக்காமலே இருந்த அவர் படங்களில் நடித்துக் கொண்டே சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் பலியானது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.