கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் பாடும் நிலா

sssss
sssss

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் கொரோன வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய சோதனையின் போது அவருக்கு கொரோனா இல்லை என அறிக்கை வெளியாகியுள்ளதாக அவரின் மகன் எஸ் பி பி சரண் தெரிவித்துள்ளார்.

எஸ் பி பி சரண் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது .

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5 ஆம் திகதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் .

அதனை தொடர்ந்து அவரின் உடல் நிலை மோசமடைந்ததாகவும், செயற்கை சுவாசக்கருவியின் உதவியுடனேயே சுவாசிக்கின்றார் என்ற தகவலும் வெளியிடப்பட்டிருந்தது .

இந்நிலையில், தற்போது அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக்கருவி அகற்றப்பட்டுள்ளதாகவும், எழுத்து மூலம் தனக்கு தேவையானவற்றை கேட்கின்றார் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இன்றைய சிகிச்சை முடிவுகளின் படி அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்ற முடிவு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் எஸ் பி பி சரண் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .